யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ், முச்சக்கர வண்டி,...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ், முச்சக்கர வண்டி, வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.
இந்த அனர்த்தம் நேற்று (11) மாலை 6.45 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, பருத்தித்துறை, பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பேருந்து, கயஸ், முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



No comments