டீ சொய்சா மகப்பேற்று வைத்தியசலையில் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டடத்திற்கான அடிகல்லை சுகாதார அமைச்சர் ராஜித ...
டீ சொய்சா மகப்பேற்று வைத்தியசலையில் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டடத்திற்கான அடிகல்லை சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன நேற்று (10) நாட்டி வைத்தார்.
இந்த நான்கு மாடி கட்டடத்தில் மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு, கர்பிணிகளுக்கான அறை வசதி தாதி பிரிவு மற்றும் பெண்கள் வைத்தியசாலை வோர்ட் வளாகம் ஆகியன அமைக்கப்படவுள்ளன.
இங்கு உரையாற்றிய அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு தற்போதைய அரசாங்கம் பதவியேற்கும் வரை எந்த அரசாங்கமும் மகப்பேறு வைத்தியசாலையை கட்டவில்லை என கூறினார்.
தற்போது 12 குழந்தைகளுக்கான வைத்தியசாலைகள் மற்றும் 12 மகப்பேறு வைத்தியசாலைகள் நாட்டுக்காக அர்ப்பணிக்க முடிந்துள்ளது.
வரலாற்றில் தற்போதைய அரசாங்கமே கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவுகள் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்கு வழங்கப்டும் மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கும் சுகாதார அமைச்சர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இப்போது இந்த நாட்டின் பொது மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்க எம்மால் முடிந்துள்ளது.
முன்னதாக, டி சொய்சா வைத்தியசாலையில் புதிய வோட்களை அமைக்க 300 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்காக 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் ஆறு மாடி வோர்டு வளாகம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர், சுகாதார அமைச்சு அதற்கான சக்தியை வழங்கியுள்ளது எனவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.



No comments