Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அரசியல்வாதிகளை தெரிவு செய்வதில் மக்கள் தவறிழைக்கின்றனர் - புத்திக்க

எதிர்காலத்தில் ஒழுக்கமிக்க மக்கள் பிரதிநிதி ஒருவரை தேர்ந்தெடுப்பது பொதுமக்களின் பிரதான கடமை என இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித...

எதிர்காலத்தில் ஒழுக்கமிக்க மக்கள் பிரதிநிதி ஒருவரை தேர்ந்தெடுப்பது பொதுமக்களின் பிரதான கடமை என இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் பட்டதாரிகள் அல்லவெனவும், எனினும் அவ்வாறான பல தலைவர்கள் நாட்டிற்கு பல சாதகமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்தரண தெரிவித்தார்.

எனினும், அன்றைய காலக்கட்டத்தை விட தற்போதைய காலக்கட்டம் மாறுபட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இன்று பொதுமக்களால் மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள், கொலை செய்யும் நபர்கள் போன்றவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நபர்கள், பாடசாலை ஒன்றிற்கு சென்று கலாசாரம் தொடர்பில் எப்படி பேசுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக, பொதுமக்களுக்கு அவர்களது கிராமம், பிரதேசம் மீது பொறுப்பு உள்ளதை போன்று, தான் தேர்ந்தெடுக்கும் நபர் தொடர்பிலும் பொறுப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்திருந்தார்.


No comments

Latest Articles