Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ரூபவாஹினி கூட்டுதாபனத்தை கையகப்படுத்துவது தன்னிச்சையான செயல்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறி...

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார்.

ரூபவாஹினி கூட்டுதாபனத்திற்கு தலைவர்களை நியமிப்பது குறித்த சர்ச்சையின் எதிரொலியாகவே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்தார்.

தற்போது இன்னோகா சத்தியங்கனி என்பவர் இலங்கை ரூபவாஹினி தலைவராக தலைவராக உள்ளார்.

இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக கெலும் பாலித்த மஹிரத்னவை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ருவான் விஜேவர்தன நியமித்தார்.

இந்த நிலையில் தற்போது ரூபவாஹினி கூட்டுதாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்துள்ளதால் இன்னோகா சத்தியங்கனியே இன்னும் தலைவர் பதவியில் நீடிக்கின்றார்.

இந்த செயற்பாடு தொடர்பாக ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ருவான் விஜேவர்தன தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு இதற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

ரூபவாஹினி கூட்டுதாபனத்தை கையகப்படுத்துவது ஒரு தன்னிச்சையான செயல் என அவர் கூறியுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுதாபனத்திற்கு பொருத்தமான ஒரு தலைவரை நியமிக்க பல சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும், ஜனாதிபதி அதைத் தடுத்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.


No comments

Latest Articles