14.09.1987 ன்று முழுவதும் குடாநாடு முழுவதும் அதே போல வட கிழக்கு மாகாணம் எங்கணும் விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்கள் யாழ் மாவ...
14.09.1987 ன்று முழுவதும் குடாநாடு முழுவதும் அதே போல வட கிழக்கு மாகாணம் எங்கணும் விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்கள் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் 15.09.1987 முதல் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நீராகாரம் கூட அருந்தாது இந்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றார் என்ற செய்தியை அறிவித்தன.
ஐந்து அம்சக் கோரிக்கைகளாவன...
1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2) சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
I



No comments