மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 சதவீதமான தொகையை கல்விக்காக ஒதுக்குவது சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவி...
மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 சதவீதமான தொகையை கல்விக்காக ஒதுக்குவது சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப கட்டடத் தொகுதி மற்றும் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு என்பன நேற்று (12) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். பாடசாலையின் அதிபர் என்.எம். சாபி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில், நாட்டின் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதாக தற்போது வாக்குறுதி அளிப்பவர்கள் தாம் அதிகாரத்தில் இருந்தபோது அபிவிருத்திகளை ஏற்படுத்தவில்லை.
எனினும், இத்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க தன்னால் முடிந்துள்ளதாக பிரதமர் கூறினார்.
நூற்றுக்கும் அதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இந்த பிரதேசத்திலே இருக்கின்றார்கள். இந்த பாடசாலையில் ஜே.ஆர். என்கின்ற கட்டிடம் ஒன்று இருக்கின்றது. அதனை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் இருக்கின்ற சிறந்த கல்வி கண்ணாக, இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைக மேற்கொள்ளப்படும்.
இப்பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திக்காக பலர் என்னிடம் வந்து உதவிகளை கேட்டனர். இது தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் கல்வி அமைச்சருடனும் ஆலோசித்து அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
1978 இல் இருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கல்வித் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டேன். எதிர்காலத்திலும் கல்வித் துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் முக்கியமாக இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். வீதி அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, மன்னாரில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.
அதற்காக அவருக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)



No comments