Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேரை விரட்டியடித்த ஸ்ரீலங்கா கடற்படை!

தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி...


தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சுமார் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்தனர் எனக்கூறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும், படகுகளில் சென்ற 2 ஆயிரம் மீனவர்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் என அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ليست هناك تعليقات

Latest Articles