Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளிநொச்சியில் நடந்த பெரும் துயர சம்பவம்; பரிதாபமாக பலியான இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் புகையிரதத்துடன் மோதுண்டு கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் பலி...


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் புகையிரதத்துடன் மோதுண்டு கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் பலி.

நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தபால் புகையிரதத்துடன் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் செல்வராசா சஜீபன் வயது 18 முறிகண்டி இந்துபுரம் முல்லைத்திவை சேர்ந்த இளைஞனும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தசாமி நிலவன் வயது 28 என்ற இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவ் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து புகையிரத்தில் பலியான இரண்டு இளைஞர்களையும் ஏற்றிக்கொண்டு திரும்பி கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்க விடயம்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments

Latest Articles