Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பல்கலைக்கழகத்தில் குண்டு வெடிப்பு! 6 பேர் பலி! 27 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் நேற்று காலை குண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த ...


ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் நேற்று காலை குண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 2 வாகனங்களில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் தொலைதூர கட்டுபாட்டு கருவிகள் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக தகுதித்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் பலியானவர்களில் பலர் சட்டவாளர்களாவர்கள் எனத்தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம்ஆப்கான் ராணுவம் மீது தலிபான்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவத்தினர்; கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles