Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பல்கலை அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2018-2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரை வில் வெளியிடப்படுமென்று பல்கலைக்கழக மானியங...


2018-2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரை வில் வெளியிடப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்தார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதிகமானதாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் அடுத்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புப் பிரிவு - பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான, பல்கலைக்ககழக உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles