Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்; சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி!

குட்டி விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்...


குட்டி விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து ஹோண்டுராஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும்,

மத்திய அமெரிக்க நாடு ஹோண்டுராஸ். இங்குள்ள சுற்றுலாத்தலமான ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று நேற்று முன்தினம் அங்குள்ள ட்ருஜில்லோ நகருக்கு புறப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات

Latest Articles