திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்...
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நபரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.
இதில் சந்தோசபுரம், சேனையூர், சம்பூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சாராயம் அருந்தி விட்டு அயல் வீட்டுப் பொண்ணொருவருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு ஏசியதோடு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் சந்தேகநபருக்கெதிராக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரை கைது செய்ததாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


No comments