Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மட்டக்களப்பில் நடந்த கொடூரம்: குறடால் தாக்கி குழந்தை பலி: தந்தை தலைமறைவு!

ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று குறடால் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது நேற்று உயிர...

ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று குறடால் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று தமிழர் தாயகத்தின் கிழக்கு பகுதியான மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த, திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே, உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன், சம்பவ தினமான கடந்த 4ஆம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மனைவியை தாக்க முற்பட்டபோது, மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையின் மீது, குறடு பட்டதையடுத்து குழந்தை படுகாயமடைந்ததையடுத்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை தப்பி ஓடியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தபோதும், சிகிச்சைப் பலனின்றி நேற்று திங்கட்கிழமை (08.04.2019) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (08.04.2019) கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments

Latest Articles