சுன்னாகம் பகுதியில் இரு பொலிஸார் மது போதையில் உந்துருளியை செலுத்தி விபத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
சுன்னாகம் பகுதியில் இரு பொலிஸார் மது போதையில் உந்துருளியை செலுத்தி விபத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியில் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளியுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் பலாலிப் பொலிஸார் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இரு பொலிசாரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சமயம் அதகளவான போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைத்தியசாலை வட்டரத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிங்களமொழி தாதியர்கள் உதவ முற்பட்டபோதும் அவர்களையும் தகாத வார்த்தைகளால் ஏசியதால் குறித்த தாதியர்களும் ஒதுங்கிக் கொண்டனர். இந்த விடயம் வைத்தியசாலையின் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ليست هناك تعليقات