கொடிகாமத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தென்மராட்சி - கொடிகாமம் இராமாவில் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 7 ம...
தென்மராட்சி - கொடிகாமம் இராமாவில் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தால் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வீதியால் சென்று கொண்டிருந்த சமயமே இருவரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் முதுகு மற்றும் கைப் பகுதிகளில் எரி காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவத்தில் தட்டாங்குளம் வீதி மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த அ.சிவசுப்ரமணியம் (வயது-60), அவரது உறவினரான அ.சுப்பிரமணியம் (வயது-60) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்தால் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்மராட்சிப் பகுதியில் புதன்கிழமை மாலை வேளையில் இடியுடன் மழைப் பொழிவு காணப்பட்டது.
ஊடவில் - குப்பிளான் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கத்தால் மூவர் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



ليست هناك تعليقات