Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புதையல் விவகாரத்தில் அதிரடியாக கைதான இரண்டு பொலிஸார்!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு...

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈச்சங்குளம் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியரத்னா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விதான ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 அளவில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் புதையல் தோண்டிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கும் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இருவரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை? புதையல் தோண்ட முற்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات

Latest Articles