Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பெண்ணுக்கு ஆபாசமாக சைகை காட்டிய இளைஞர் வசமாக மாட்டினார்!

கொழும்பில் கார் ஒன்றில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு ஆபாசமாக சைகை காட்டிய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முச்சகர...

கொழும்பில் கார் ஒன்றில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு ஆபாசமாக சைகை காட்டிய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முச்சகரவண்டியின் சாரதியான குறித்த இளைஞர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காலி வீதியில் பெண்ணொருவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த இளைஞர் தனது முச்சக்கரவண்டியில் அவரைப் பின்தொடர்ந்ததுடன் ஆபாசமான முறையில் சைகை காட்டியுள்ளார்.

இதனை தனது தொலைபேசியில் காணொளியாக்கிய குறித்த பெண் தனது முகநூல் பக்கத்தில் நடந்த சம்பவத்தை விபரித்து பகிர்ந்திருந்தார்.

குறித்த காணொளி பலரால் பார்க்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞனை கைதுசெய்யவேண்டும் என்ற கருத்துக்கள் வலுத்தன.

இதனையடுத்து இதுகுறித்த முறைப்பாடு பொலிஸாரிடம் பதிவுசெய்யப்பட்டமைக்கு அமைவாக அந்த இளைஞர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

ليست هناك تعليقات

Latest Articles