இந்தியாவிலே சர்ச்சைக்குரிய விடயமாக பேசிக்கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம் சார்ந்த சம்பவத்தினிடையேதான் மற்றொரு கொடூரம் பொள்ளாச்சியி...
இந்தியாவிலே சர்ச்சைக்குரிய விடயமாக பேசிக்கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம் சார்ந்த சம்பவத்தினிடையேதான் மற்றொரு கொடூரம் பொள்ளாச்சியில் அரங்கேறியது.
கடந்த 13.03.2019 அன்று பொள்ளாச்சி அருகில் உள்ள கெடிமேடு PAP பாசனக் கால்வாயில் ஒரு கார் கவிழ்ந்து அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அந்த சம்பவத்தில் நடந்த இன்னொரு விடயம் பெரும்பாலும் ஊடகங்களில் வரவில்லை.
அதுதான் இறந்த பெண்ணின் மானத்தைக் காத்த ஒரு தமிழனின் வீரமிகு செயல்...
மிக ஆபத்தான அந்த கால்வாயில் கார் வீழ்ந்ததால் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட ஆறுபேரும் மாண்டுபோனார்கள். தண்ணீருக்குள் வீழ்ந்த காரின் கதவுகள் மூடிக் கிடந்ததனால் யாருமே உயிர் பிழைக்காத நிலை காணப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த மறுநாள் அதிகாலை அந்த காரையும் இறந்தவர்களையும் வெளியே கொண்டுவருவதற்கான பணிகள் இடம்பெற்றன. மிகவும் ஆபத்தான நீரோட்டமுள்ள அந்த கால்வாயில் பெயர் தெரியாத தீயணைப்பு வீரர் ஒருவர் தனது இடுப்பில் கயிறுகட்டியவாறு குதித்தார்.
அந்த கால்வாய் நீரில் உயிரைப் பணயம் வைத்து மூழ்கிய அவர், காரில் கயிற்றைச் சுற்றிக் கட்டுகிறார். அதிகாலை இருளில் ஒருவாறாக போராடி அந்தக் காரைச் சுற்றி கெட்டியான கயிற்றைக் கட்டிவிடுகிறார்.
ஆனால் அப்போதுதான் ஒன்றை அவர் உணர்ந்தார். அந்த காரின் கதவொன்று திறந்த நிலையில் அதிலிருந்த பெண் ஒருவரது சடலம் காருக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. உடனடியாக அந்த பெண்ணின் உடலை நீர் அடித்துச் செல்லாதவாறு கெட்டியாகப் பிடித்தவாறு மேலே கொண்டுவருகிறார்.
ஆனால் அப்போதுதான் இன்னொரு விடயமும் அவருக்கு தெரியவருகிறது. நீரோட்ட மிகுதியால் அந்த பெண்ணின் மேலாடை அடித்துச் செல்லப்பட்டுள்ளதை கண்டறிந்தார். உடனடியாக அந்த உடலை நீர் மேற்பரப்பிற்குக் கொண்டுவராமல் ஓடும் நீருடன் போராடியவாறு நீளமான துணி ஒன்றைப் போடுமாறு சத்தமாக கத்துகிறார்.
மேலிருந்தவர்களால் துணி கொடுக்கப்பட்டதன் பின்னர் அந்த பெண்ணின் உடல் மேற்பகுதியில் நீருக்குள் வைத்தவாறே துணியால் கெட்டியாகச் சுற்றிவிட்டு பிறிதொரு கயிற்றில் பிணைந்து பாரம்தூக்கி மூலம் மேலே அனுப்பினார்.
இறந்த ஒருவரின் உடலிலை எப்படியாவது எந்த நிலையிலாவது மீட்கலாம் என்ற சிந்தனையிலிருந்து மாறுபட்டவராய் குறித்த தீயணைப்பு வீரர், கண்ணியமாக நடந்துகொண்ட விதம் அங்கிருந்தோரை நெகிழவைத்தது.
ஏராளமான பெண்கள்மீது பாலியல் குற்றம்புரிந்த அந்த கொடூர இளைஞர்கள் மத்தியில் இப்படியுமொரு இளைஞனா என அனைவரும் வியந்து பேசியுள்ளமை அவதானிக்கமுடிந்தது.



ليست هناك تعليقات