சிறிலங்காவில் உள்ள நொச்சியாகம பிரதேசத்தில் மூன்று மாத குழந்தை ஒன்றை தரையில் போட்டு அடித்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுதொ...
சிறிலங்காவில் உள்ள நொச்சியாகம பிரதேசத்தில் மூன்று மாத குழந்தை ஒன்றை தரையில் போட்டு அடித்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பில் தெரியவருவதாவது, நொச்சியாகம, கடலுபத்வெவ, பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து கணவர் மனைவியை தடி ஒன்றால் தாக்கியுள்ளார். இதன்போது மனைவியின் கையிலிருந்த மூன்று மாத குழந்தையும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை குழந்தையை குறித்த தந்தை தரையில் போட்டு அடித்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான குழந்தை நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



ليست هناك تعليقات