திருக்கேதீச்சர சிவராத்திரி வளைவு உடைப்புச் சம்பவம் தொடர்பில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், உண்மைக்குப் புறம்பான அறிக்கையினை வெளியிட்டுள்ள...
திருக்கேதீச்சர சிவராத்திரி வளைவு உடைப்புச் சம்பவம் தொடர்பில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், உண்மைக்குப் புறம்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளதாக திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஆலயத்திற்கென அமைக்கப்பட்ட வீதியின் முகப்பில்தான் வளைவு அமைக்கப்பட்டதேயென்றி லூத்து மாதா கோவிலுக்கு அண்மையில் இல்லை எனவும் திருப்பணிச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
திருக்கேதீச்சரத்தில் என்ன நடந்தது எனும் தலைப்பில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் ரோசையினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்குமுகமாக திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 1903ஆம் ஆண்டு ஆலயம் மீளமைக்கப்பட்டபொழுது ஆலயத்திற்குச் செல்வதற்காகவே திருக்கேதீச்சர வீதி அமைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை இங்கு இணைக்கின்றோம்..


No comments