மட்டக்களப்பில் சிசு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பராமரிப்பு காரணமாக நேற்றும்(24) ஒரு பச்சிளம் பாலகன் மரணமடைந்துள்ளான். மட்ட...
மட்டக்களப்பில் சிசு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பராமரிப்பு காரணமாக நேற்றும்(24) ஒரு பச்சிளம் பாலகன் மரணமடைந்துள்ளான்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி 01 யில் 09 மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாப மரணமடைந்துள்ளது.
தாய்க்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக குழந்தை முறையாக பராமரிக்கப் படாமையால் குறித்த சிசு மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இக் குழந்தையின் பெற்றோரின் வறுமை நிலையினாலும், உதவிக்கு யாருமில்லாததினாலும் குழந்தையை ஒன்பது மாதகாலமாக கிளினிக் எதற்குமே பெற்றோர் அழைத்துச் செல்லவில்லை எனவும், இதனால் உடல் நிறை, வளர்ச்சி எதுவுமே தெரியாத நிலையில் பெற்றோர் இருந்துள்ளனர்
ஏன் இக் குழந்தையை கிளினிக் அழைத்துவராமல் இருகிறார்கள் என கேட்க, தாய்க்கு சுகயீனம் என்று கூறிய உறவினர்கள் MIDWIFE எனப்படும் குடும்பநல உத்தியோகத்தர் கூட அந்த குழந்தையை பார்க்க வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே குழந்தையின் தாய்க்கு மனநோய் ஏற்பட்டதால், தாய்ப்பால் கொடுக்க முடியாமல் லக்டொஜன் பால் மாவையே கொடுத்து வந்துள்ளனர். இதனால் சிசுவின் நிறை குறைவாக இருந்துள்ளது.
ஒன்பது மாதமாக குழந்தைக்கு தடுப்பூசி கூட போட முடியாமல் தாய் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் (23) தான் செங்கலடி MOH அலுவலகத்துக்கு சென்று குழந்தைக்கு இரண்டாம் மாதத்தில் போடவேண்டிய தடுப்பூசியை ஒன்பதாம் மாதத்தில் போட்டுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
சுகதேகியாக இருந்த குழந்தைக்கு நேற்று (24) அதிகாலை 02,30 மணியளவில் திடீரென வாந்தியுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சிறிது நேரத்தில் சிசு மரணித்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் ஒவ்வொரு அடிப்படை சுகதாரத்தை கவனிப்பதற்கே பெரும்பாலும் ஒவ்வொரு வலயம் அல்லது பிரதேச செயலகத்திற்கு உரித்தான வைத்தியதிகாரி(MOH) அலுவலகத்தின் கடமை.
இதில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் தமது தொழில் ஒரு வைத்தியசாலை உத்தியோகத்தர் அல்ல, களப்பணியாளர்களாவர்.
நேரடியாக ஓவ்வொரு வீடு வீடாக சென்று கர்ப்பணி தாய்மார் நிலை அறிந்து அவர்களை பற்றிய அறிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக தகவல்களை சேகரிப்பது முக்கிய கடமையாகும்.
பிள்ளை பிறப்பின் பின் தமது ஒதுக்கப்பட்ட ஊர் பகுதியில் வாழும் மாத, நாட் கணக்கான சிசுக்களின் நிறை, தாய்ப்பால் உள்ளெடுப்பது, தடுப்பு ஊசி போடுதல், போடாத குழந்தை வீட்டிற்கு நேரடியாக செல்லுதல், இரத்தத்தின் அளவு போன்றவற்றை பரிசோதித்து இதில் சாதாரணத்தை விட குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது குடும்ப நல உத்தியோகத்தர்கள் கடமை என கூறப்பட்டுள்ளது.



No comments