Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காட்டுக்குள் சென்ற கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குழைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர். மெராயா ஊவாக்...

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குழைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மெராயா ஊவாக்கலை தோட்டம் 3ம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து இச்சடலத்தை 19.02.2019 அன்று மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வனப்பகுதிக்கு சென்ற அப்பகுதி பிரதேச மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குழைந்து காணப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சுமார் 25 மற்றும் 30 வயதுக்கிடையில் உள்ள இளைஞனின் சடலம் என தெரியவந்துள்ளது.

சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், குறித்த இளைஞனை எவராவது கொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார்களா என்ற கோணத்தில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Latest Articles