புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்தியா மிரட்டல் விடுத்ததை அடுத்து ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி க...
புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்தியா மிரட்டல் விடுத்ததை அடுத்து ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் "உங்கள் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் ; நமது வீரர்களின் தியாகத்தை வீண்போக விடமாட்டோம்" என இந்திய வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுமென நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நேற்றைய (18) தினம் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளராக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ள பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தமது படைகளை பயன்படுத்தும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த காரணத்தினால் இந்த பிராந்தியத்தில் மோசமான சூழல் நிலவுகிறது. ஆகவே, பதற்றத்தை குறைக்க உதவுங்கள் என குறித்த கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முன்னதாக, எங்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்களும் அதிகப்படியான விலையை கொடுத்தே ஆக வேண்டுமென இந்திய பிரதமர் எச்சரித்திருந்த நிலையிலேயே ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று குறித்த பிரட்ச்சனையில் ஐ.நா.சபை பெரும்பாலும் தலையிட வாய்ப்பில்லை? அப்படி தலையிட்டால் இந்தியாவின் நகர்வு எப்படி இருக்கப்போகிறது என அரசியல் நோக்குனர் எதிர்ப்பார்க்கின்றனர்.


No comments