Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சற்றுமுன் முக்கிய நபரைச் சுமந்துகொண்டு யாழ் நகரில் தரையிறங்கிய இராணுவ உலங்கு வானூர்தி!

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மா நகரசபை மைதானத்தில் தரையிறங்கினார். பலா...

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மா நகரசபை மைதானத்தில் தரையிறங்கினார்.

பலாலியிலிருந்து புறப்பட்ட இராணுவ உலங்கு வானூர்தி மூலமாகவே ரணில் யாழ்ப்பாண நகருக்கு விஜயம் மேற்கொண்டார்.

சற்று முன்னர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் புதிய விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதியினை திறந்துவைக்கவுள்ளார்.

மேலும் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பலாலி வானூர்தி நிலையத்தையும் காங்கேசன் துறை துறைமுகத்தையும் விருத்தி செய்வதற்கான ஆராய்வுகள் பிரதமர் ரணிலின் இந்த விஜயத்தில் முக்கியத்துவபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Latest Articles