Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலருக்கு நேர்ந்த கதி!

பிரான்ஸ் நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட எழுபது பேரும் சற்று முன்னர் கட்டு நாயக்கவில் குற்றப் புலனாய்வு...

பிரான்ஸ் நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட எழுபது பேரும் சற்று முன்னர் கட்டு நாயக்கவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து பிரான்ஸின் ரியூனியன் தீவுக்குள் நுழைந்த குறித்த எழுபதுபேரும் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் குறித்த நபர்களை தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லையென்றும் இலங்கைக்கு மீண்டும் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் பிரான்ஸ் அறிவித்திருந்தது.

அத்துடன் இலங்கையின் கடற்தொழில் மற்றும் நீரியல்வள திணைக்களமும் இதுதொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தது. பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் குறித்த நபர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குறித்த எழுபதுபேரும் இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments

Latest Articles