போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என எழுந்துள்ள கதையாடலையடுத்து இலங்கை கத்தோலிக்க...
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என எழுந்துள்ள கதையாடலையடுத்து இலங்கை கத்தோலிக்க பேரவை குறித்த உத்தேசத்திற்கு தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.
கத்தோலிக்க சபையின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஏற்ப எந்தவொரு குற்றத்திறகாகவும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை ஆதரிக்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் போதைப் பொருள் ஒழிப்பிற்காக வேண்டி அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் எனவும் போதைக்கு அடிமையானவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் எனவும் அதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கத்தோலிக்க சபையின் அறிக்கையில் கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரன்ஜித் உட்பட 14 ஆயர்கள் குறித்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.


No comments