Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பொறுப்பதிகாரியுமாக விள...


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பொறுப்பதிகாரியுமாக விளங்கிய பிறைசூடி காலமானார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இவர் அரசதுறையில் சேவையாற்றிய வேளையில் இலங்கையில் தனிச் சிங்களச் சட்டம் நிறை வேற்றப்பட்டு, தமிழ் அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களத்தை கற்க வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியைத் துறந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களில் ஒருவரான இவர், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்தியாவில் தஞ்சடைந்தமை குறிப்பிடத்தக்கது.                           

No comments

Latest Articles