யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் – பருத்தித்த...
யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நல்லூர் – பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னத்துரை சசிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
குறித்த நபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல் வெட்டிக்கொண்டு இருந்த சமயம் மதிய நேரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments