இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போதுநீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...
இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போதுநீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இரணைமடு குளத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் பார்வையிட்ட போதே, வட மாகாண ஆளுநர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,178 மில்லியன் ரூபா செலவில் இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டது.
இரண்டு வருடங்களின் பின்னர் குளத்தின் நீர் கொள்ளளவு, முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை இன்று நேரில் ஆராய்ந்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்ட இரணைமடுகுளம் அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக காணப்பட்டநீர் கொள்ளளவு தற்போது ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 500 ஏக்கர்அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது எனவும், குளத்தின்நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை எட்டும் போது ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.







No comments