Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தலை துண்டிக்கப்பட்ட சடலம்; அடையாளம் காணுமாறு கோரிக்கை!

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதுண்டு ஆண் ஒருவரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலத்தினை அடையாளம் க...


மட்டக்களப்பில் தொடருந்தில் மோதுண்டு ஆண் ஒருவரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக துண்டிக்கப்பட்டு சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் அதனை அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



No comments

Latest Articles