Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

விடுதலைப்புலிகளின் மிக முக்கிய புள்ளி உயிருடன், வவுணதீவு பொலிஸார் கொலைக்கு காரணம் அவர்களே? கருணா அதிரடித் தகவல்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் ...


விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

ரிவிர என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச் செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடானது, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கினாலும் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ள கருணா இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Latest Articles