Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்.

இலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம். இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவ...


இலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்ததாக தமிழக கரையோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பி.ஜேசுதாஸ் குறிப்பிட்டார்.

மீனவர்களை விடுதலை செய்ய தமிழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட போது கடந்த புதன்கிழமை (28) மாலை இந்திய மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles