Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புகையிரத நிலையத்திற்கு அருகில் கிடந்த சடலம்; நடந்தது என்ன!

புகையிரத நிலையத்திற்கு அருகில் கிடந்த சடலம்; நடந்தது என்ன! தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள...

புகையிரத நிலையத்திற்கு அருகில் கிடந்த சடலம்; நடந்தது என்ன!

தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 27.12.2018 அன்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 65-ற்கும் 70-ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Latest Articles