ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள டெனரிஃப் தீவில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் சுனாமி போன்று கடல் அலைகள் தாக்கிய வீட...
ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள டெனரிஃப் தீவில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் சுனாமி போன்று கடல் அலைகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில் கடற்கரையில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடி வரை கடல் அலைகள் எழுந்ததை அவதானிக்க முடிகின்றது.
இதனையடுத்து இரண்டு தளங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
டெனரிஃப் தீவின் வட பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானாலும், ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.



No comments