Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தனி ஈழம் ஒன்றே தமிழர்களுக்கான தீர்வாக அமைந்திடும் - தொல். திருமாவளவன்.!

சிங்கள ஆட்சியாளர்களிடத்தே அதிகாரத்தினை வேண்டி நின்றுகொண்டிருப்பதனை விடவும், தனி ஈழம் அமைவது தான் ஈழத்து மக்கள் சுதந்திரமாகவும், சுயா...



சிங்கள ஆட்சியாளர்களிடத்தே அதிகாரத்தினை வேண்டி நின்றுகொண்டிருப்பதனை விடவும், தனி ஈழம் அமைவது தான் ஈழத்து மக்கள் சுதந்திரமாகவும், சுயாட்சி பூர்வமாகவும் வாழ்ந்திட உதவுமென தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

மாணவப்பருவத்தில் விடுதலைப்புலி என்ற கையெழுத்து இதழினை தொடங்கியது முதல், தமது அரசியல் கட்சியினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரிட்டது வரை தொடர்ச்சியாக ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கிவருவதாக அறியப்படுகிற திருமாவளவன் சமீபத்தில் இலங்கைக்கு பயணம் புரிந்து வந்துள்ளார். இறுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈழம் சென்ற திருமா, புலிகள் இயக்க தலைமையை அப்போது இரண்டாவது முறையாக நேரில் சந்தித்துவந்தார்.

இந்த நிலையில், தற்போதைய ஈழப்பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திருமா, " இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமைய நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஈழத்து அரசியல் தலைமைகள் வெளிப்படையாக தனி ஈழம் அமைய வேண்டுமென பேச முடியாது என்ற சூழல் அங்கு உள்ளது. ஆனால், என்னைப்பொறுத்தமட்டில் சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதும் தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்துகொள்ள, அதற்கு அமைய நடந்துகொள்ள போவதில்லை. ஆகவே, தனி ஈழம் அமைவது ஒன்றே எம் மக்களுக்கான நிரந்தர விடிவாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

No comments

Latest Articles