Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தற்போது கிடைத்த செய்தி: மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! தீவிர நடவடிக்கைகள் ஆரம்பம்!!

சிறிலங்காவின் பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகள் நாடாளுமன்ற அங்கீகரிப்பின்படியே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனால் அதற்கும் எதிர்ப்பை வெளியி...


சிறிலங்காவின் பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகள் நாடாளுமன்ற அங்கீகரிப்பின்படியே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனால் அதற்கும் எதிர்ப்பை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவில் தற்பொழுது சட்டபூர்வமான ஒரு அரசாங்கம் இல்லை என்பதில் உறுதியாக நிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி, பிரதமராக ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் பதவி சட்ட விரோதமானது என கூறிவருகிறது.

அதற்காக மூன்றுமுறை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளும் மஹிந்தவுக்கு எதிராக நிறைவேறியுள்ளதாக கூறுகின்றது.

இந்த நிலையில் சட்டவிரோதமான பிரதமர் பதவியில் இருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து நாடாளுமன்றின் அங்கீகாரம் இல்லை எனவும், அத்தகைய ஒரு அங்கீகாரமற்ற னிதி ஒதுக்கீட்டுக்காக தாம் எதிர்ப்பை வெளியிடப்போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

குறித்த அங்கீகரிப்பை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டுமென்பதாலும் நாடாளுமன்றில் தமது தரப்பே பெரும்பான்மையை நிரூபிக்கும் வலுவில் இருப்பதாலும் இந்த விடயத்தில் உறுதியாக நிற்கப்போவதாக தெரியவருகிறது.

No comments

Latest Articles