Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தற்போது கிடைத்த செய்தி: மைத்திரிக்கு தொலைபேசியூடாக அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர்!

சிறிலங்கா அரச தலைவரால் இன்று மாலை சர்வ கட்சி மாநாடொன்று நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் குறித்த மாநாட்டினைப் பகீஷ்கரிப்பதற்கு சபாநா...



சிறிலங்கா அரச தலைவரால் இன்று மாலை சர்வ கட்சி மாநாடொன்று நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் குறித்த மாநாட்டினைப் பகீஷ்கரிப்பதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக குறித்த மாநாட்டினை மக்கள் விடுதலை முன்னணியும் பகீஷ்கரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சபாநாயகரும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி சபாநாயகர் இந்த முடிவினை தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்றைய கட்சித் தலைவர்கள் மா நாட்டின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சிகளையும் பொதுத் தேர்தலுக்கு உடன்படுவதற்கான ஆதரவினை கேட்கப்போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் சபா நாயகர் இந்த முடிவுக்கு வந்திருபதாக அறியமுடிகிறது.

ஏற்கனவே மூன்று தடவைகள் மஹிந்தவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக மைத்திரிக்கு அறியத்தந்தும் அவர் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Latest Articles