தலவாகலைக்கலை பிரதான நகரப்பகுதியில் பாரிய பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ...
தலவாகலைக்கலை பிரதான நகரப்பகுதியில் பாரிய பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பிரதான நகரில் இன்று அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கிரைண்டிங் மில் மற்றும் அழகு சாதான பொருட்கள் விற்பனை நிலையம் ஆகிய இரண்டு வியாபார நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை இருப்பினும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பற்றி எரிந்த தீயை பிரதேச மக்கள், தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. தீ ஏற்பட்டதற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments