2009 இறுதி யுத்தத்தின் கடைசி நாட்காளாகிய மே 16.17. 18.. தினங்களில் மாவீரரான தமிழீழ விடுதலைப்புலிகளின் சில தளபதிகளுக்கு வீரவணக்க நிகழ்வ...
2009 இறுதி யுத்தத்தின் கடைசி நாட்காளாகிய மே 16.17. 18.. தினங்களில் மாவீரரான தமிழீழ விடுதலைப்புலிகளின் சில தளபதிகளுக்கு வீரவணக்க நிகழ்வு ஒன்றை சுவிஸ் போராளிகள் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
போராளிகளும் மக்களும் பெருமளவில் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், . தளபதிகளான சூசை, பானு, ஜெயம், அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன், புலணாவுத்துறையைச் சர்ந்த மாதவன் மாஸ்டர், லக்ஸ்மன், ரமேஷ், கண்ணன், நேரு, ரட்ணம், புலித்தேவன், இசைப்பிரியா ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இது இவ்வாறு இருக்க, வீரவணக்கம் செலுத்தப்பட்ட தளபதிகளில் சிலர் தற்பொழுதும் உயிருடன் இருப்பதாக பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், போரளிகள் கட்டமைப்பினர் வீரவணக்கம் செலுத்திய தளபதிகளில் குறைந்தது ஒருவர்தானும் உயிருடன் இருப்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும், அவ்வாறு நிரூபித்தால் நீங்கள் அத்தனை பேரும் சிங்கள பெளத்த அரசின் வால் பிடிகள் என்பதை ஏற்று கொள்வீர்களா? என்று சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, போராளிகள் கட்டமைப்பு மேற்கொண்ட வீர வணக்க நிகழ்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை கண்டணம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இசைப்பிரியாவை போராளியாகச் சித்தரித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை அறிவிப்பு!!



No comments