Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பல நூறு போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இரணைப்பாளை மாவீரர் துயிலும் இல்லம் கடந்த சில நாட்களாக அக்கிராம மக...


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இரணைப்பாளை மாவீரர் துயிலும் இல்லம் கடந்த சில நாட்களாக அக்கிராம மக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலங்களில் பல நூறு போராளிகளின் வித்துடல்கள் இந்த பிரதேசத்தில் விதைக்கப்பட்டதை நாம் யாவரும் அறிந்ததே.

கடந்த வருடம் இந்த கிராம மக்களின் உழைப்பின் மூலம் பல எதிர்ப்புக்கும் மத்தியில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் முதல் தடவையாக மிகவும் உணர்வெளிச்சியுடன் நடத்தப்பட்டது.

இந்த வருடமும் கடந்த வருடத்தைப்போன்று எழுச்சியுடன் நிகழ்வை நடாத்த கிராம இளைஞர்கள் முதியவர்கள் வழிகாட்டிகள் இந்த கிராமத்தை சேர்ந்த புலம்பெயர் உறவுகள் முயற்சித்து வருகின்றனர்.



No comments

Latest Articles