பாடும்மீன் vs றோயல் T.P பத்மநாதன் ஞாபகார்த்தமாக யாழ் லீக் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று (30/10/2018) இரவு துர...
பாடும்மீன் vs றோயல்
T.P பத்மநாதன் ஞாபகார்த்தமாக யாழ் லீக் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று (30/10/2018) இரவு துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் பாடும்மீன் அணி இரு கோல்களை பெற்று முன்னிலை வகித்தது.தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பாடும்மீன் அணி இரு கோலையும் & றோயல் அணி ஒரு கோலையும் பெற்று கொள்ள ஆட்ட நேர முடிவில் 04:01 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
பாடும்மீன் அணி சார்பாக சாந்தன் 03, கெயின்ஸ் 01 கோலை பெற்று கொடுத்தனர்..
பாடும்மீன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.



ليست هناك تعليقات