கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் பெங்களூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் பெங்களூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 24 வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் எப்.சி அணி, அட்லெடிகோ டி கோல்கத்தா அணிகள் பலபரீட்சை மேற்கொண்டன.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை தோற்கடித்து. இதன் மூலம் தனது 3 வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் 15 வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் கோமல் தாட்டல் கோல் போட்டார். இதற்கு பதிலடி கொடுக்கம் வகையில் 45 மற்றும் 47 வது நிமிடங்களில் பெங்களூர் வீரர்களான மிகு, எரிக் பார்த்தலு கோல் அடித்தனர். இந்த போட்டி மூலம் கொல்கத்தா அடையும் 3 வது தோல்வியாகும்.



ليست هناك تعليقات