Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

"ஆப்கானிஸ்தானில்" 25 இராணுவ வீரர்கள் பரிதாப பலி!

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான பராவில், ...


ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான பராவில், அரசாங்க அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்பட 25 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென மலையில் மோதி விமானம் நொறுங்கியது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டரைத் தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.

இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது யூசப் கூறுகையில்,

ஹெலிகாப்டர் மீது நாங்கள் நடத்திய நேரடி தாக்குதல் இது என கூறியுள்ளார். இருந்தபோதும், ஹெலிகாப்டர் கீழே விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles