தமிழ் மக்களுக்கான நீதியையும், உரிமைகளையும்வென்றெடுக்க வேண்டுமானால் தமிழர் தரப்பு முதலில் ஒற்றுமையாக இணைந்து செயற்படமுன்வரவேண்டும் என ம...
தமிழ் மக்களுக்கான நீதியையும், உரிமைகளையும்வென்றெடுக்க வேண்டுமானால் தமிழர் தரப்பு முதலில் ஒற்றுமையாக இணைந்து செயற்படமுன்வரவேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் கோரிக்கைவிடுத்திருக்கின்றார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகநீர் ஆகாரம் இன்றி தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 31 ஆவதுஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் இன்றைய நாளில் இதற்காக திடசங்கட்பத்துடன்செயற்படுவதாக அனைவரும் உறுதிபூண வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டகொடூரங்களுக்காக நீதி வேண்டி தொடர்ச்சியாக போராடிவரும் முக்கிய அமைப்புக்களில் ஒன்றானமன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்வலியுறுத்தியுள்ளார்.
தியாக தீபம் திலிபன்நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்திலிபனின் 31 ஆவது ஆண்டுநினைவுதின நிகழ்வொன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் சரியாக 10.48 அளவில் தியாகதீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது சர்வமதத் தலைவர்கள், வடமாகாண சுகாதாரஅமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, சட்டத்தரணிபா.டெனிஸ்வரன், மன்னார்நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகரசபை உறுப்பினறுர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் எனபலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலிபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்
இதன்போது உரையாற்றிய மன்னார்மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தமிழ் மக்கள்ஒற்றுமையுடன் செயற்படும் பட்சத்திலேயே தமிழினத்திற்கான விடிவு கிடைக்கும் எனகுறிப்பிட்டார்.



No comments