Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அப்பம் சாப்பிடுவோர்க்கு அதிர்ச்சி! என்னதான் நடக்கிறது இலங்கையில்?

அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து...



அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போது 12 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாக இன்று முதல் அதிகரிப்படுகிறது.

இதேநேரம், முட்டை அப்பத்தின் விலையில் எவ்வித அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, 12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 195 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி நாளுக்கு நாள் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் மத்தியில் கடும் விசன நிலை தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Latest Articles