Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மைத்திரி- கோத்தா -சினைப்பர்! நாமல் – நாலக்க- !சதி-ராட்ட பரபரப்பு!

நாமல்குமார,நாலக்க டி சில்வா, காணாமல்போனசினைப்பர் , அகப்பட்டுகொண்ட இந்திய தோமஸ்(மனநோயாளி?)என பரபரப்புக்கதைகள்சிறிலங்காவின் அரசியலில் ...




நாமல்குமார,நாலக்க டி சில்வா, காணாமல்போனசினைப்பர்

, அகப்பட்டுகொண்ட இந்திய தோமஸ்(மனநோயாளி?)என பரபரப்புக்கதைகள்சிறிலங்காவின் அரசியலில் இப்போது சுற்றிச்சுழல்கின்றன.

இவர்கள்எல்லோரும் யார்? என்பதற்குரிய விபரங்கள்வெளிவர முன்னரே பரபரப்பான செய்திகள்அடுத்தடுத்துக்கிளம்பி விட்டன.

அதேபோல சிறிலங்காவின் பயங்கரவாதப்புலனாய்வுப்பிரிவு பாதுகாப்பு களஞ்சியத்தில் இருந்த, சினைப்பர் எனப்படும்குறிபார்த்துச்சுடும்துப்பாக்கியொன்று, காணாமல்போனதாக செய்திகள் வந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுகளுடன்ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டதுஅல்லவா?

அவ்வாறுகைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின்படி இந்த சினைப்பர் துப்பாக்கிகைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

இதற்கிடையேஇன்று நாமல்குமார சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.

அவரது குரல்மாதிரியும் இராசயன பகுப்பாய்வாளர்களால் பதிவுசெய்யப்பட்டது.

ஆக மொத்தம் தொடரும் பரபரப்புகளுக்குஇன்னமும் குறைவில்லை.

இதற்கிடையேஇந்த விடயத்தில் தோமஸ் என்ற இந்தியபிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதால் வெளியரங்கம் தொடர்பானசஸ்பென்சுகளுக்கும் குறைவில்லை. ஆனால் கைதுசெய்யப்பட்ட இந்தியர்2000 ஆம் ஆண்டில் இருந்து ஒருமனநோயாளி என கொழும்பில் உள்ளஇந்திய தூதரகம் தற்போது அறிக்கையிட்டுள்ளது.

இந்த சஸ்பென்ஸ் கதை தொகுப்பின் பின்னணிதான்என்ன?

சிறிலங்காஅரசதலைவர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள்பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சஆகியோரை கொல்லும்சதி முயற்சி குறித்தகதைகளில் ஆரம்பித்ததே இந்த பரபரப்புக்களின் தொகுப்பு.

இதற்கு ஆதாரமாக ஒரேயொரு தொலைபேசிஉரையாடல் இருந்தது.

இந்ததொலைபேசிஉரையாடலை வெளியிட்டவரும் நாமல்குமாரதான்.

அதன் பின்னரே நாமல்குமாரவா? யார்அது என்பதாக தலைகள் உயர்ந்தன.




சிறிலங்காவின்பயங்கரவாத தடுப்புப்பிரிவின்பிரதி காவற்துறை மா அதிபர் நாலக்கடி சில்வாவுடன் இந்ததொலைபேசி உரையாடல் நடத்தப்பட்டதாக நாமல்குமாரகுறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர்தான் நாமல்குமார என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும்தோமஸ் என்ற இந்தியர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.இவர் கேரளாவை சேர்ந்த மலையாளி.தற்போது அவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமல்குமாரவெளிப்படுத்தும் தகவல்களின் படி சிறிலங்காகுற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நாலக்கடி சில்வா கடந்தகாலங்களில் பல விடயங்களை தன்னுடன்பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின்காவற்துறை மா அதிபர்தான் தனக்குநாலக்க சில்வாவை அறிமுகப்படுத்தியதாக வேறுஅவர் கூறினார்

நாமல்குமாரகூறிய முக்கிய தகவல்கள்இவைதான்.

2020 இல்மைத்திரியும் கோத்தபாய ராஜபக்சவும் அரசியல்கூட்டணி ஒன்றை அமைக்கப் போவதால்

2020 ஆண்டுநெருங்கும்போது, பாதாள உலக கும்பலில்உள்ள மாகந்துரே மதுஷ் என்ற வாடகைகொலையாளியைபயன்படுத்தி, முடிந்ததை செய்யுங்கள் என அதிகாரி நாலக்கடி சில்வா தனக்குக்கூறியதாக நாமல்குமார கூறினார்.

முடிந்ததைசெய்யவேண்டியது சரி! என்ன செய்யவேண்டும் என தான் அப்போதுவினவிய போது எது வேண்டுமானாலும்செய்யுங்கள் என அவர் கூறியதாகவும்அவர் குறிப்பிடுகிறார்

மாகந்துரேமதுஷ் எனபவருக்கும் கோட்டாபயாவுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது.

அதேபோலவேபோதைப் பொருள் விற்பனைக்கு எதிராகமைத்திரி குரல் கொடுப்பதால் அவர்மீதும் மாகந்துரே மதுசுக்கு கோபம் இருப்பதால் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் எனமைத்திரியையும் கோத்தபாயவையும் கொல்லும் வகையில் அந்ததிட்டம் இருந்ததாக கூறப்பட்டது.

கிழக்கில்மட்டக்களப்பு அல்லது அம்பாறை பிரதேசத்துக்குமைத்திரி செல்லும்போது தாக்கி விட்டு அதற்குரியபழியை கிழக்கு அரசியல்வாதி ஒருவர் மீதுசுமத்தும் திட்டம் இருப்பதாக நாலகசில்வா தனக்குக் கூறியதாக நாமல்குமாரசொல்கிறார்.

ஆனால் நாமல்குமார என்பவர் யாரென்பதே தெரியாதுஎன நாலக சில்வாகூறுகிறார். இதற்குள் கைதுசெய்யப்பட்ட தோமஸ்என்ற இந்தியருக்கும் இந்த சதிமுயற்சிக்கும்( அவ்வாறுஒன்று இருந்தால்) என்ன தொடர்பு என்பதுதெளிவாக குறிப்பிடப்படவில்லை ஆனால் ராஜபக்சகுடும்பத்தை குறிவைக்கும் திட்டம் தோமஸிடம் இருந்தாகமுன்னர் குறிப்பிடப்பட்ட நிலையில் அவர் ஒருமனநோயாளி என இந்திய தூதரகம்தற்போது கூறிவிட்டது.

ஆகமொத்தம்நாமல்குமார, நாலக சில்வா, சினைப்பர்துப்பாக்கி ,மலையாள தோமஸ் எனஇடியப்பச்சிக்கல்பரபரப்பாக தொடர்கிறது இந்த சதி-ராட்டம்.

No comments

Latest Articles