Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள் – ஐ.நா.வில் மைத்திரி

எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன ஐக்கிய நாடு...

எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்பில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா. தலைமையகத்தில் ஆரம்பமானது.

முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். அதனால் சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையை வழங்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

அத்துடன் இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.


No comments

Latest Articles