தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் மற்றும் மக்களின் வாக்குப் பலம் என இரண்டு போராட்ட சக்திகள் இருந்ததாகவும் எனினும் தற்போ...
தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் மற்றும் மக்களின் வாக்குப் பலம் என இரண்டு போராட்ட சக்திகள் இருந்ததாகவும் எனினும் தற்போது தமிழ் மக்களிடம் ஜனநாயக பலம் மாத்திரமே காணப்படுவதாகவும்.,
இந்த நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் தமிழக பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள ஆகியோருக்கும் இடையே சிநேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுடைய விடயங்களில் அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக நகர்வதாக தெரிவித்த அவர், தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் மற்றும் மக்களின் வாக்குப் பலம் என இரண்டு போராட்ட சக்திகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும் தற்போது தமிழ் மக்களிடம் ஜனநாயக பலம் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.



No comments