முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16 ஆம் தேதி சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய அந்த அமைப்ப...
முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16 ஆம் தேதி சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கருணாஸ் பிற சமூகங்கள், ஊடகங்கள், முதல்வர் காவல்துறையினரை மிக கொச்சையாக விமர்சித்திருந்தார். கருணாஸின் பேச்சு சமூகத்தில் மிக கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியது.
சாதிய மோதல்களை தூண்டும் வகையில் ஓர் சட்டமன்ற உறுப்பினரே பேசுவதா? அவரை உடனடியாக கைது செய்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து நிலையில், கருணாஸ் மீது சுமார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது, ஐபிஎல் போராட்டத்தின் போது ரசிகர்களை தாக்கியதாக 2 வழக்கு கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அதிகாரிகளை கடந்த 16ஆம் தேதி அவதூறாக பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாஸ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று மீண்டும் விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.



No comments