Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மக்களே தயாராக இருங்கள் - பல மணி நேரங்கள் இருளில் மூழ்கவுள்ள இலங்கை; வெளியானது அறிவிப்பு!

நாடு பல மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் எனவும் மக்கள் அவ்வாறான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன...


நாடு பல மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் எனவும் மக்கள் அவ்வாறான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் 2022 ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் அறிவிப்பு

இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர மேலும் தெரிவிக்கையில்,

நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும்.

இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும்.  தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகின்றது.

பரபமரிப்பு வேலையில் மின் பிறப்பாக்கி

மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும். இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் பராமரிப்பு வேலை காரணமாக இயங்கவில்லை.

நவம்பர் 2022 இற்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Latest Articles